Editorial / 2018 மே 01 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்


எதிர்வரும் 7ஆம் திகதி, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தொழிலாளர் தினப்பேரணியும் கூட்டமும் இடம்பெறவுள்ள நிலையில், இன்று (01) தொழிலாளர் தேசிய சங்கத்தின் 53ஆவது பிறந்த தினம், மற்றும் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, உணர்வுபூர்வமாக தொழிற்சங்க காரியாலயத்தில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னோடி தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்று ஹட்டனில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளருமான எம்.திலகராஜ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளர் பிலிப், தொழிலாளர் மாகாணசபை உறுப்பினர்களாகிய ஸ்ரீதரன். ராம் உட்பட பிரதான, கிளைக்காரியாலயங்களில் கடமையாற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்
இதன் போது, ஹட்டன் பூல்பேங் தோட்டத்தில் அமைக்கப்பட்டு, விரைவில் மக்களுக்கு கையளிக்கப்படவிருக்கும் வீடமைப்புத்திட்டத்துக்கு ‘பி.வி.கந்தையாபுரம்’ என பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தொழிற்சங்க முன்னோடிகளின் நினைவு கூறும் வகையிலான உரைகளும் இடம்பெற்றன. பி.வி.கந்தையா முன்னாள் தொழிலாளர் தேசிய சங்க பொதுச் செயலாளராகவும், மத்திய மாகாண சபை உறுப்பினராகவும் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 minute ago
14 minute ago
34 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
14 minute ago
34 minute ago
3 hours ago