Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 06 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், இம்முறை ஒரே நிலைப்பாட்டில் இருப்பதற்கு, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களும் ஒன்று கூடி இன்று (6) தீர்மானித்துள்ளதுடன், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, உப குழு ஒன்றையும் அமைத்துள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு மூன்று தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம், எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தின் அமைச்சில், இன்று (6) நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன் சார்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மேற்படித் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
16 minute ago
37 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
41 minute ago