R.Maheshwary / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
அக்கரப்பத்தனை - டொரிங்டன்,ஸ்டார்,எல்பெபத்த ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்கள் இன்று (12) காலை தொடக்கம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த (05)ஆம் திகதி டொரிங்டன் தோட்ட தொழிற்சாலையிலிருந்து கல்மதுரை தோட்டத்துக்கு உரம் மூட்டைகளை ஏற்றி சென்ற ட்ரெக்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (11) காலை உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்த தொழிலாளிக்கான சவப்பெட்டி செலவு மற்றும் மரணச் சடங்கு செலவு மாத்திரம் தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் தொழில் நிமிர்த்தம் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர் மற்றும் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் இதற்கான நீதி கிடைக்கும் வரை தாம் பணிக்கு செல்வதில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்து பணி நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago