2025 மே 17, சனிக்கிழமை

தொழில் அமைச்சருடன் காங்கிரஸ் கடும் பேச்சு

Freelancer   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வு காணும் நோக்கில், தொழில் அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான  கலந்துரையாடல் தொழில் அமைச்சில் நேற்று (30)  இடம்பெற்றது.

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் தோட்டங்களில், தோட்ட நிர்வாகம் தொழிலாளர் சட்டத்தை மீறுவதுடன், தொழிலாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக  இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் குற்றம் சாட்டினார். 

மேலும் அனைத்து தோட்டங்களிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெற்றால் மாத்திரம் தோட்ட நிர்வாகம் வழமைபோல் செயற்படுவதற்கு இ.தொ.கா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.

அக்கரப்பத்தன பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் 10,000 தோட்ட தொழிலாளர்கள் வழமைபோல் செயற்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், இ.தொ.கா சுட்டிக்காட்டிய தொழிலாளர் முறைப்பாடுகள் தொடர்பில்  உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொழில் திணைக்களத்துக்கு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .