Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 23 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளராக கல்யாணகுமார் தெரிவு செய்து, தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர் பீடத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகஸ்த்தர் சபை கூட்டமும் நிர்வாகசபை கூட்டமும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் தலைமையில், ஹட்டனில் நடைபெற்றது.
இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச் செயலாளரும் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினருமான பழனிவேல் கல்யாணகுமார் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் உயர் பீடத்துக்கு, மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவருமான முத்தையா ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணித் தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பாலகிருஷ்ணன் சிவநேசன் ஆகியோர் உள்வாங்கப்பட்டனர்.
இதன்போது, பஅடுத்த வருடத்துக்கான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டி விவரங்கள் அடங்கிய கோவை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரான மயில்வாகனம் உதயகுமாரிடம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப் ஒப்படைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
1 hours ago