Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Kogilavani / 2020 நவம்பர் 29 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டங்களுக்கு தீயணைப்புப் பிரிவின் சேவை முறையாகப் பெற்றுக்கொடுப்படுவதில்லை என்றுச் சாடிய தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச சiபின் உறுப்பினர் மு.இராமச்சந்திரன், சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட நிவ்வெளி தோட்ட லயன் குடியிருப்பில், 27 ஆம் திகதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 12 குடியிருப்புகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் பிரிவின் வராமை குறித்து அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் வௌண்டன் வீட்டுக்குச் சென்ற தீயணைப்புப் பிரிவு, நிவ்வெளி தோட்டத்துக்கு ஏன் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
தீ விபத்து ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உரிய பகுதிக்குப் பொறுப்பான உள்ளூராட்சி மன்றங்கள் எடுக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதுடன், ஆனால், வழமையாக இடம்பெறும் இவ்வாறான அசம்பாவிதங்கள் குறித்து அதிகாரத்தில் உள்ள தரப்பு கண்டும் காணாதைப் போல செயற்படுவதாகவும் சாடினார்.
நிவ்வெளி தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்புப் பிரிவை வரவழைப்பதற்கு நோர்வூட் பிரதேச சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
'வௌண்டனிலுள்ள இராஜாங்க அமைச்சரின் பூர்வீக வீடு தீ பற்றியதும் நுவரெலியாவியிருந்து 34 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வௌண்டன் தோட்டத்துக்கு தீயணைப்பு படைகள் சென்றன. ஆனால், 12 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதிக்கு யாரும் பொருப்புக் கூறிவலில்லை.
'தோட்டங்களுக்கு தீயணைப்புப் படைகளால் சேவையாற்ற முடியாதென்றால் தோட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள அமைச்சரின் வீட்டுக்கு தீயணைப்பு பிரிவு எவ்வாறு சென்றது' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தோட்டபுறங்களுக்கு சேவையாற்றக் கூடியவாறே, உள்ள10ராட்சி மன்ற சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் எனவே பிரதேச சபைகளினூடாக தீயணைப்பு சேவைகளை பெருந்தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தீ விபத்துகள் இடம்பெறும் போது வெறுமனே அனுதாபம் தெரிவிக்காமல், மலையக மக்களுக்கு தீயணைப்புப் பிரிவின் சேவைகளை முறையாகப் பெற்றுக்கொடுப்பதற்கு, சம்பந்தப்பட்டத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago