Ilango Bharathy / 2021 ஜூன் 24 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
பூண்டுலோயா சீன் பழைய தோட்ட கீழ்பிரிவு தோட்ட நிர்வாகத்தின், மனித நேயமில்லா
போக்கைக் கண்டிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொத்மலை பிரதேசசபை
உறுப்பினர் ‘இராமையா பாரதிராஜா‘ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (22) பூண்டுலோயா சீன் பழைய தோட்ட கீழ்பிரிவு தோட்டத்தில் சுகயீனம்
காரணமாக, வீட்டிலேயே உயிரிழந்த 7 வயது விசேட தேவையுடைய சிறுவனின் உடலை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள, நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென அப்பகுதி பொது சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
எனினும் குறித்த சிறுவனின் உடலைக் கொண்டுசெல்வதற்கு அத்தோட்ட நிர்வாகத்தால் வாகனம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அத்தோட்டத்திலுள்ள முச்சக்கர வண்டி இளைஞர் ஒருவர் முன்வந்து அச் சிறுவனின் உடலை முச்சக்கரவண்டியில் ஏற்றி நுவரெலியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தோட்ட நிர்வாகத்தின் மனித நேயமற்ற போக்கைக் கண்டிப்பதாகத் தெரிவித்த ‘இராமையா பாரதிராஜா‘ தற்போது நாட்டில் நிலவும் கொரோனாத் தொற்றின் காரணமாக இவ்வாறான நிலமைகள் காணப்படுவதாகவும், அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்ற நிலையில், அம்புலன்ஸ் மற்றும் ஏனைய வசதிகளையும் முன்கூட்டியே ஏற்படுத்திகொடுக்க முன் வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

14 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago
4 hours ago
4 hours ago