2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

தோட்ட வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதால் மக்கள் பாதிப்பு

R.Maheshwary   / 2022 மே 04 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை இலக்கம் ஒன்று மத்திய பிரிவு தோட்டத்தில் இயங்கிய தோட்ட வைத்தியசாலையானது, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தோட்ட நிர்வாகத்தினால் இழுத்து மூடப்பட்டுள்ளது.

இராகலை இலக்கம் 01, 02, சென்லெணாட்ஸ், டி.சி.தோட்ட பிரிவு, ஆகிய தோட்டங்களின் தொழிலாளர்களின் நலன் கருத்திற் கொண்டு ஆரம்ப காலம் முதல் இத்தோட்ட வைத்தியசாலை இயங்கி வந்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெருந் தோட்டங்களை தனியார் கம்பனிகள் பெறுப்பேற்ற பின், பெருந் தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக இவ் வைத்தியசாலைக்கு தேவையான மருந்து வகைகள் வழங்கப்பட்டு,  நீண்டகாலமாக இயங்கி வந்தது.

இந்த நிலையில் இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வந்த தோட்ட  வைத்தியர் (ஈ.எம்.ஏ) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர்,

வைத்தியரின் பணியை முறையாக முன்னெடுக்க தோட்ட நிர்வாகம் இடம்கொடுக்காது, அலட்சிய போக்கை கடைப்பிடித்து வந்ததால் அவ்வைத்தியர், கெட்டபுலா பிரதேச தோட்டம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

எனினும் இதுவரை இந்த வைத்தியரின் வெற்றிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையின் ஒரு பகுதியை தோட்ட உத்தியோகஸ்தரகளுக்கு தங்குமிடமாக வகுத்தும் கொடுத்துள்ளது.

இதனால், ஆறு கிலோமீட்டர் தூரம் நடந்தும்,அல்லது சுமார் 600/=ரூபாய் வரை வாகனத்திற்கு செலவு செய்து,ம் டெல்மார் தோட்ட வைத்தியசாலைக்கு சென்று தமது மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதாக  தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விடயம் தொடர்பில் புதிய தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமாரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X