Editorial / 2024 ஜனவரி 30 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

அதிகளவான ஒளி வடிவங்கள் மற்றும் சத்தம் உமிழும் பஸ்களால் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக நுவரெலியா நகரின் ஏனைய வாகன சாரதிகள் மற்றும் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வார இறுதி விடுமுறை நாட்களில், நுவரெலியாவுக்கு சுற்றுலா வரும் ஏராளமான பஸ்கள், மோட்டார் வாகன விதிமுறைகளை மீறி, பஸ் முழுவதும் பிரகாசமான ஒளி வடிவங்கள், உரத்த ஒலி எழுப்பி, ஒலிபெருக்கிகளை ஏற்றி, நுவரெலியா முழுவதும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. நுவரெலியா நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
நுவரெலியா நகருக்கு வரும் வாகனங்கள் தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தை மீறி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியிடம் நாம் கேட்டதற்கு பதிலளித்த அவர், நுவரெலியாவிற்கு இனிமேல் வரும் இவ்வாறான பஸ்களில் அலங்கார ஏற்பாடுகள் மற்றும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்படும் என்றார். மோட்டார் வாகன ஆணைக்கு மாறாக செயற்படும், அந்த பஸ்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதுடன் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தப்படும் என்றார்.

ரஞ்சித் ராஜபக்ஷ
22 minute ago
26 minute ago
35 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
35 minute ago
41 minute ago