2025 மே 16, வெள்ளிக்கிழமை

நகரக் குரங்குகள் தோட்டத்தில் அட்டகாசம்

R.Maheshwary   / 2023 ஜனவரி 31 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை  நகரத்தில் உள்ள குரங்குகள் ஆக்ரோவா தோட்ட குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வரும் குரங்குகள்  வீடுகளில் வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை உண்பதுடன்,  விவசாய  பயிர்கள் அனைத்தையும்  நாசப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும்  குடியிருப்பு பகுதியில் கூரைகள் மீது குரங்குகள் தாவி அங்கும் இங்கும் ஓடி திரிவதால், கூரைத்தகடுகள் சேதமாவதாகவும்  வீடுகளில் தனியாக சிறு பிள்ளைகளை விட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மின்சார கம்பங்களில் குரங்குகள் தொங்கி விளையாடுவதால் மின் இணைப்பும் இடைக்கிடையே துண்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள், பொதுமக்களின் நலன் கருதி, குரங்குகளைக் கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும்  தோட்ட மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .