2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நகரசபை மண்டபத்திலுள்ள சிலிண்டர்கள் மாயம்

R.Maheshwary   / 2022 நவம்பர் 21 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா                                       

ஹட்டன்- டிக்கோயா நகரசபைக்குரிய டிக்கோயா நகர மண்டபத்தில் இருந்த இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என, ஹட்டன்- டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஏ.பி. அனுராத சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நகர மண்டபம் பல்வேறு நிகழ்வுகளுக்காக வழங்கப்பட்டு வருவதாகவும் இதன்போது உணவு தயாரிப்பிற்காக வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இரண்டே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பொறுப்பாக நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில்,  குறித்த சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளமை பாரிய பிரச்சினை என்றும் இது தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, காணாமல் போயுள்ள சிலிண்டர்களுக்கான பணத்தை அதற்கு பொறுப்பானவரிடம் இருந்து அறவிடப்பட வேண்டும் என்றும் ஹட்டன்- டிக்கோயா நகரசபை உறுப்பினர் ஏ.பி. அனுராத சில்வா தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .