Freelancer / 2023 மார்ச் 06 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனியார் பஸ்ஸொன்றுக்குள் விழுந்து கிடந்த 40 ஆயிரம் ரூபாய் அடங்கிய பணப்பையை அந்த பஸ்ஸின் நடத்துனர் உரிய பயணியிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த பஸ்ஸில், சனிக்கிழமை (04) தவறவிடப்பட்ட பணப்பையே உரியவரிடம் நடத்துனர் சாமகுமாரவினால் நேற்று (05) கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்ட தனியார் பஸ்ஸில் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேர் அடங்கிய குழுவொன்று பயணிக்க உள்ளது என, அந்த குழுவைச் சேர்ந்த ஒருவர் நடத்துனருக்கு அலைபேசி அழைப்பை எடுத்து உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்தக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கு ஆசனங்களை ஒதுக்க முடியாது என நடத்துனர் தெரிவித்துள்ளார். எனினும், அலைபேசி அழைப்பை எடுத்து ஆசனங்களை ஒதுக்கிய நபர், சாரதிக்கு அருகிலுள்ள பொனட்டில் அமர்ந்து பயணித்துள்ளார்.
அவர், வட்டவளையில் இறங்கிக் கொண்டார். எனினும், தன்னுடைய பணப்பை காணாமற்போனத்தை அறிந்து, நடத்துனருக்கு அலைபேசி வழியாக அறிவித்துள்ளார். அதன் பின்னர், பொனட்டில் இருந்த பயணப் பொதிகளை அப்புறப்படுத்திவிட்டு பார்த்தத்தில் பணப்பொதி விழுந்து கிடந்துள்ளது.
அதனை எடுத்த நடத்துனர், உரிய பயணியிடம் ஒப்படைத்துள்ளார். கொழும்பில் வேலை செய்யும் பயணி, நீண்ட நாட்களுக்குப் பின்னர் நீண்ட விடுமுறையில் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago