R.Maheshwary / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
"மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் ஆகும். இதில் நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே.." என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க கடமைப்பட்டுள்ளனர். இதனை எதிர்ப்பது என்பது நாட்டை புறம்தள்ளி, மக்களை புறம்தள்ளி, இன்று வீதியில் இறங்கி போராடும் இளைஞர் யுவதிகளின் கருத்தை, கோஷத்தை ஏளனப்படுத்தி, தமது சொந்த நலனுக்காக செயற்படுவதாகும்.
இன்று முழு நாடும் போராட்ட களமாக மாறியிருக்கின்றது. நாளுக்கு நாள் பொருளாதாரம் மீள கட்டியெழுப்ப முடியாத அதளபாதாளத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. இவற்றுக்கு உடனடி தீர்வு அவசியம். மக்கள் கேட்பது, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், புதியதொரு இடைக்கால அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்ட வேண்டும் என்பது. அதற்கான உத்தியோகபூர்வ ஆரம்பமே, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகும்.
வீதிகளிலே மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப போராடுகின்ற போது, அதற்கு மதிப்பளித்து, அரசியல் அமைப்பிற்கமைய, பாராளுமன்றத்தில் நாம் அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலையை செய்ய வேண்டி இருக்கின்றது. அதற்காக நம்பிக்கையில்லா பிரேரணை முன் வைக்கப்பட்டிருக்கின்றது என்றார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026