2025 மே 15, வியாழக்கிழமை

நடுவீதியில் கரணமடித்த காரும் மோட்டார் சைக்கிளும்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

கண்டி- தவுலகல பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட வெலிகல்ல பிட்டவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கண்டியிலிருந்து  பயணித்த மோட்டார் சைக்கிள் இ.போ.ச பஸ் ஒன்றை முந்தி செல்ல முயற்சித்ததைக் கண்டு, கம்பளை பகுதியில் இருந்து எதிர்த்திசையில் பயணித்த காரின் சாரதி, தமது காரை ஓரமாக்க முயன்ற போது, கார் தலைகீழாக புரண்டு விழுந்தது.

இதனையடுத்து  மோட்டார் சைக்கிளும் நடு வீதியில் கரணணமடித்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர்   காயங்களுக்கு உள்ளாகி கெலம்பதெனிய பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் .

எனினும் காரின் சாரதி, காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளைதவுலகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .