2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நடுவீதியில் தீப்பற்றி எரிந்த ஓட்டோ

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 25 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஒரே குடும்பத்தினர்  பயணித்த  ஓட்டோவொன்று இன்று  (25) பிற்பகல் தீப்பிடித்து எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை நிரப்பிக்கொண்டு லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே, இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

ஓட்டோ இவ்வாறு தீப்பற்றி எரிந்த போது, ஓட்டோவுக்குள் தாய், தந்தை மற்றும் மகளும் பயணித்துக்கொண்டிருந்ததுடன், தந்தையே ஓட்டோவை செலுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள நுவரெலியா பொலிஸார், இந்த தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X