Kogilavani / 2017 மே 01 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
காமினி பண்டார, மு.இராமச்சந்திரன், செ.தி.பெருமாள்
நல்லத்தண்ணி, லக்ஷபான பகுதியில், தனது நண்பர்களுடன் மதுபானம் அருந்தச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை, கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லத்தண்ணியை சேர்ந்த எம்.எம்.லலித் (வயது 45) என்பவரே, இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது சடலம், லக்ஷபான தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாகவுள்ள வீதியிலிருந்து இன்றக் காலை மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி நபரைக் கொலைசெய்ததாகக் கூறி, நல்லத்தண்ணியைச் சேர்ந்த இரா.விஜயகுமார் (வயது 32) என்பவர், நல்லத்தண்ணி பொலிஸில் நேற்றுக் காலை சரணடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நல்லத்தண்ணி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, லக்ஷப்பான தொழிற்சாலைக்கு முன்பாகவுள்ள வீதியிலிருந்து, ஆணொருவரின் சடலத்தை, நல்லத்தண்ணி பொலிஸார் நேற்றுக் காலை மீட்டனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே, விஜயகுமார் என்பவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
மதுபானம் அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட முரண்பாடே, இக்கொலைக்கு காரணமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
23 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
47 minute ago