2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நன்நீர் மின்பிடித்துறை ஊக்குவிப்பு; காசல்ரீயில் மீன்கள் விடுவிப்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நன்நீர் மீன்பிடி தொழிற்றுறையை மேம்படுத்தும் நோக்கில், காசல்ரீ நீர்தேக்கத்தில், கூடு அமைத்து 1 இலட்சத்து 25,000 மீன்குஞ்சிகளை வளர்க்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மத்திய மாகாண மீன்பிடி அமைச்சின் நிதியொதுக்கீட்டில், நுவரெலியா மாவட்ட நன்நீர் வளர்ப்பு திணைக்களத்தால், மேற்படி வேலைத்திட்டம், சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

காசல்ரீ நன்நீர் மீன் வளர்ப்பு சங்கத்தினரின் வேண்டுகோளுக்கமையவே, இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக, மீனினங்கள் வளர்ச்சிடையும்வரை, அவற்றை 45 நாட்களுக்கு பாதுகாக்கும் நோக்கில், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கூடு அமைக்கப்பட்டுள்ளது.

இம்மீனினங்கள் வளர்ச்சியடைய 45 நாட்கள் தேவைப்படுமென்றும் அதன் பின்னர் அவரை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் விடப்படுமென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த மீன் இனமானது, ஒரு வருடத்தில் பத்து மடங்கு உற்பத்தியாவதுடன், ஒரு மீன், 45 கிலோகிராம் எடையுடன் காணப்படுமென்று, அதிகாரிகள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .