Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2022 ஜூலை 04, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 23 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹப்புத்தளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிட்ரத்மலை தோட்டத்தில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பால்மாவை பகிர்ந்தளிக்கும் செயல்பாட்டில், போக்குவரத்து செலவுக்கென பிரதேச சபை சேர்ந்த சிலரால் 50 ரூபா பொதுமக்களிடம் அறவிடும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக ஆளுநரின் செயலாளரிடம் உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பதுளை மாவட்ட செயலாளர் , ஹப்புத்தளை பிரதேச செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளரிடம் விசாரணை அறிக்கையும் கோரியுள்ளார்.
குறித்த நிவாரணப் பொருட்களை இலங்கை துறைமுகத்தை வந்தடையும் வரை தேவையான ஏற்பாடுகள் இந்திய அரசு வழங்கி இருந்தது. துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை விடுவித்து( clearness) ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்காக 400 மில்லியன் ரூபாவிற்கு மேலதிகமான செலவுகள் திறைசேரியின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிவாரணப் பொருட்கள் மக்களின் வீட்டு வாசல் வரை கொண்டு சேர்க்கப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மேலதிகமாக நிதி வசூலித்தால் எவரும் கொடுக்க வேண்டாம் எனவும், அவ்வாறு நிதி வசூலிப்பவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையான
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
5 hours ago