2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

நாட்டின் தற்போதைய நிலை பெருந்தோட்ட மக்களுக்கே பெரிதும் பாதிப்பு

R.Maheshwary   / 2022 மார்ச் 23 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பொருளாதார சீரற்ற நிலைமை காரணமாக பெருந்தோட்ட மக்கள் ஏனைய மக்களை விட பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவை பிரதேச தோட்டக் கமிட்டி தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதாரக் கொள்கை மற்றும் நிர்வாக செயற்பாடு காரணமாக எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எரிப்பொருள், அத்தியாவசியப் பொருள்களுக்கும் என்றுமில்லாதளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் எத்தகைய வருமானமுமின்றி வாழ்கின்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் ஏனையவர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் குறைந்த வருமானத்தையே தற்போது பெற்று வருகின்றனர்.அந்த வருமானத்தைக் கொண்டு தற்போதைய வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாது தத்தளிக்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதும் தற்போது அந்த நிவாரணம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X