2025 மே 01, வியாழக்கிழமை

நானு-ஓயா – உடரதெல்ல பகுதியில் புதிய காட்சிக்கூடம் அமைக்க ஒப்பந்தம்

Gavitha   / 2021 மார்ச் 10 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா பிரதேச சபைக்கும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் இடையில், முதலீட்டு ஒப்பந்தம் ஒன்று வெகு விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது என, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.

தவிசாளர்  தலைமையில், நேற்று (09), நுவரெலியா பிரதேச சபையின் நானு-ஓயா காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நுவரெலியா பிரதேச சபைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், நானு-ஓயா உடரதல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஒலிபரப்பு நிலைய வளாகப் பகுதியில், நுவரெலியா பிரதேச சபை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை ஒன்றிணைந்து, முதலீட்டு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக, அபிவிருத்திச் செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

இந்த உடன்படிக்கைக்கு அமைய, ஒலிபரப்பு நிலைய வளாகத்தில்  நுவரெலியா பிரதேச சபை நிதியின் ஊடாக, வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டவர்கள் விரும்பத்தக்கக் காட்சி கூடம் ஒன்றை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் ஒலிபரப்பு நிலைய வளாகப்பகுதியில் நிர்மாணிக்கப்படும் காட்சிக் கூடத்துக்கு வருகை தரும் உல்லாசப்பயணிகளிடத்தில் அறிவிடப்படும் கட்டணங்கிளின் மொத்த வருமானம் இரண்டு தரப்பினருக்கும் பிரித்துக்கொடுக்கப்படும் வகையிலேயே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .