2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

'நாம் ஒன்றிணைந்து கிராமத்தை அபிவிருத்தி செய்வோம்'

R.Maheshwary   / 2022 மார்ச் 24 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

“நாம் ஒன்றிணைந்து கிராமத்தை அபிவிருத்தி செய்வோம்” என்ற தொனிப்பொருளில், லிந்துலை பொது சுகாதார  காரியாலயத்தின் வைத்திய அதிகாரிகளான துரைராஜ் ரெஷ்மி, ஆறுமுகம் ஜெயராஜன் தலைமையில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 அக்கரபத்தனை- மன்ராசி நிஷாந்தினி கேட்போர் கூடத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்,

வைத்திய அதிகாரி துரைராஜ் ரெஷ்மி கருத்து தெரிவிக்கையில்,

 லிந்துலை பொது சுகாதார பிரிவில்  பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் பலரால் முன்னெடுக்கப்படுகின்றது.

ஒவ்வொரு தனி நபர்களும் தங்களுக்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி பணிகளை  செய்வதனால் அது பாரிய மாற்றத்தை காண முடியாமல் இருப்பதுடன், சமூகத்தில் பிரச்சனை தீர்ந்ததாக இல்லை.

அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து, சமூக அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக எமது கிராமத்தை அபிவிருத்தி செய்வோம். என்ற அடிப்படையில் அமைப்புகளை ஒன்றிணைக்கும். வேலைத்திட்டத்தை நாம் இன்று முன்னெடுத்துள்ளோம்.

தற்போது கிராமப்புறங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் குடும்ப வன்முறைகள், பாலியல் ரீதியான வன்முறைகள்,  உளவியில் ரீதியான பிரச்சினைகள், தாய்மார்களின் போசணை குறைபாடு, இளம் வயது திருமணம் உள்ளிட்ட பிரச்சினைகள் சமூகத்தில் அதிகரித்து வருகின்றன.

 இதனை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து.செயல்படுவதன் மூலம் இவ்வாறான பிரச்சினைகளை நாம்  குறைக்க முடியும்  என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X