2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

நாய்களால் கடித்து குதறப்பட்ட மானுக்கு சிகிச்சை

R.Maheshwary   / 2022 ஜூன் 06 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நாய்களால் கடித்து காயமாக்கப்பட்ட மான் ஒன்று, சிகிச்சைக்காக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வட்டவளை- டெம்பள்ஸ்டோ வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற விமானப்படை அதிகாரியொருவரே காயமடைந்த மானை வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இஹலவட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில், நேற்றைய தினம் குறித்த மான், நாய்களால் கடிக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில், அருகிலிருந்த இளைஞர்களும் குறித்த விமானப்படை அதிகாரியும் நாய்களிடமிருந்து மானை காப்பாற்றி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X