2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாற்றிசையும் நான்கு நேரங்கள்

Editorial   / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் சின்ன இங்கிலாந்து என்றழைக்கப்படும் நுவரெலியா மாநகரின் மத்தியில் இருக்கும் க​டிகாரம், நான்கு திசைகளிலும் வெவ்வேறான நான்கு நேரங்களை காண்பிக்கின்றது. இதனால், வெளியிடங்களில் இருந்து நுவரெலியாவுக்குச் செல்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

நுவரெலியா லயன்ஸ் கிளப்பின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி இந்த மணிக்கூட்டு கோபுரம் 2019 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. அதனை நுவரெலியாக நகர சபை பராமரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

நான்கு திசைகளிலும் உள்ள மணிக்கூடுகள் பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை மாறி, மாறி ஓசை எழுப்புவதால், சுற்றுலாப்பயணிகள், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிவருகின்றனர்.

ஆகையால், நான்கு திசைகளில் இருக்கும் மணிக்கூடுகளிலும் சரியான நேரத்தை வைத்து சரியான மணித்தியாலத்துக்கு ஓ​சை எழுப்பும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X