2026 ஜனவரி 21, புதன்கிழமை

நாவலப்பிட்டி நகர சபை தவிசாளர் பணிநீக்கம்

Ilango Bharathy   / 2021 ஜூன் 18 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நாவலப்பிட்டி நகர சபையின் தவிசாளராகக் கடமையாற்றிய ச்சங்க சம்பத், மத்திய மாகாண
ஆளுநர் லலித் யூ கமகேயின் அதிவிசேட வர்த்தமானி ஊடாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (17) நாவலப்பிட்டியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு
செய்திருந்த சசங்க சம்பத், தன்னை பணிநீக்கம் செய்து வர்த்தமானியை வெளியிட்டுள்ள மத்திய மாகாண ஆளுநர், அரசியல் ரீதியாக அன்றி எதிர்கட்சி மற்றும் ஆளுங்கட்சியின் தவிசாளர்களை ஒரே கண்ணோட்டத்தில் அவதானிக்க வேண்டும் என்றார்.

தான் இந்த நகர சபையின் நிர்வாகத்தை மிகவும் தூய்மையாக முன்னெடுத்துள்ளதாகவும், தனக்குஎதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நாவலப்பிட்டி தொகுதி ஒருங்கிணைப்பாளர் பதவி  வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாவலப்பிட்டி மக்களுடன் இணைந்து செயற்பட
தன்னால் முடியும் என்றார்.இதேவேளை நாவலப்பிட்டி நகர சபை தவிசாளரான ஹேவா வடுகே சசங்க சம்பத், ஐக்கியதேசியக் கட்சியின் உறுப்புரிமையை நிறைவு செய்துள்ளதால், அவரது தவிசாளர் பதவியை அவர் கைவிட்டுள்ளாரென தெரிவித்து நாவலப்பிட்டி நகர சபையின் தெரிவத்தாட்சி அதிகாரி மாபாமுதியன்ஸலாகே சேன குமாரிசிறி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X