Ilango Bharathy / 2021 ஜூன் 06 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்கூம்ஸ் தோட்ட மக்களுக்கு பல அமைப்புகளினால் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புக்கு அமைய நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.லோகநாதன் ஆகியோரால் நேற்று மாலை உலர் உணவு பொதிகள் சென்கூம்ஸ் தோட்ட தலைவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இதன் போது உலர் உணவு பொதிகளை வழங்கிவைக்கச் சென்ற அரசியல் பிரமுகர்களை சென்கூம்ஸ் தோட்டத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டுள்ளவர்கள் சுமார் அரைமணித்தியாலயங்களுக்கு மேலாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இது குறித்து பாதுகாப்பு பிரிவின் மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு கிடைக்கப்பெற்ற அனுமதியைத் தொடர்ந்தே உணவுப் பொருட்களைக் கையளிக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago