Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Kogilavani / 2020 நவம்பர் 29 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் நிவ்வெளி தோட்டத்தில், வெள்ளிக்கிழமை (29) ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என்று, சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் செயலாளரும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு, இன்று (29) சென்ற, அவர் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,
ஹொலிரூட், சென்கிளயர், அகரக்கந்தை ஆகிய தோட்டங்களில், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இதுவரையும் ஒரு தீர்வும் எட்டப்படாத நிலையில், நோர்வூட் நிவ்வெளி தோட்டத்திலும் தீ விபத்து ஏற்பட்டிருப்பது அம் மக்களின் வாழ்வை நிலைகுலையச் செய்துள்ளது என்றார்.
ஏற்கெனவே பாரிய குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்திருந்த இம்மக்கள், தற்சமயம் வீடுகளும் இன்றி தவித்துக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இந்த மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்கள், தங்களிடம் அமைச்சில்லை, அதிகாரம் இல்லையெனக் கூறி காலத்தை கடத்தாமல் அந்த மக்களுக்கான நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago