R.Maheshwary / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெஸ்போட் பிரதேசத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (26) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டெஸ்போட் மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மகேந்திரன் சதிஸ்குமார் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இவர், நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
வீட்டாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நானுஓயாவில் கிலாரண்டன் பகுதியில் தனது உறவினர் வீட்டில் ஐந்து நாட்களாக தங்கி இருந்த இவர், நண்பர்களுடன் நீராட சென்றுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து கொண்டுவந்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
41 minute ago
59 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
59 minute ago
5 hours ago