Freelancer / 2022 டிசெம்பர் 10 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
வருடாந்தம் டிசெம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், 74 ஆவது மனித உரிமைகள் தினம் "எனக்கும் குரல் உண்டு" எனும் தொனிப்பொருளில் சர்வதேச ரீதியாக கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி பிராந்திய காரியாலயம் மற்றும் நுவரெலியா கிளை காரியாலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வு, நுவரெலியாவில் இன்று (10)இடம்பெற்றது.
நுவரெலியா பிராந்திய கிளை காரியாலய மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரும்,
பேராசிரியருமான கலாநிதி விஜித்த நானயக்கார தலைமை தாங்கி நடத்தினார்.
இதில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மத்திய மாகாண பிராந்திய ஒருங்கிணைப்பாளர் குமுதினி வித்தான உள்ளிட்ட பலர் சிவில் அமைப்புகளின் பிரதநிகளும் கலந்து கொண்டனர்.


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago