Editorial / 2024 டிசெம்பர் 06 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா லங்கம டிப்போவில் கடமையாற்றிய காவலாளியை கொலைசெய்து டிப்போவில் வைப்பிலிடப்படவிருந்த சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
டிப்போவில் காவலராக பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தை சேர்ந்த கே.லோகேஸ்வரன் என்ற 85 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிலர் காவலாளியை கொன்றுவிட்டு டிப்போவில் இருந்த அலுமாரியில் இருந்து சுமார் ஒன்பது லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவலாளி தனது பாதுகாப்பு அறையில் காத்திருந்தார், அப்போது சில கும்பல் அல்லது நபர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
கொலைச் சம்பவத்தின் போது, டிப்போவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரும், காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா லங்கம டிப்போவில் வியாழக்கிழமை (05) பிற்பகல் ஓடிய பஸ்களின் வருமானம் வங்கியில் வைப்பிலிடுவதற்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக அந்த டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
33 minute ago
40 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
3 hours ago
05 Nov 2025