2025 மே 15, வியாழக்கிழமை

நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த இ.தொ.கா

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரச்சாரத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தல் பிரச்சார ஆரம்பக்கூட்டமும் கொட்டகலை சீ.எல்.எப் மண்டபத்தில் நேற்று (06) நடைபெற்றது.

இதன்போது, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், எம்.பியுமான மருதபாண்டி ராமேஸ்வரன், சிரேஷ்ட உறுப்பினர் அனுசியா சிவராஜா, தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், இ.தொ.காவின் உப தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என கட்சி செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி சபைகளில் 7 சபைகளில் யானை சின்னத்திலும், 5 சபைகளுக்கு சேவல் சின்னத்திலும் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .