Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ். கே. குமார்
2023ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் ஒரிரு நாட்கள் இருக்கும் நிலையில், அதனை வரவேற்று, கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகிவருகின்றனர். பெரும்பாலானவர்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதிலேயே அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், நுவரெலியா, லோசன் வீதியிலுள்ள லங்கா சதொசவில் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வரும் நுகர்வோர்களுக்கு சதொச நிலைய முகாமையாளர் சில நிபந்தனைகளை விதித்துள்ளார் என அறியமுடிகின்றது.
பொருட்களை பொதியிட்டுவதற்கான சொப்பின் பைக்கு, தட்டுப்பாடு நிலவுவதால் சொப்பின் அல்லது கைப்பைகளுடன் வரும் நுகர்வோருக்கு மட்டுமே பொருட்கள் விற்பனை செய்யப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சொப்பின் அல்லது கைப்பைகளை கொண்டு செல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், நுகர்வோர் அங்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி கொள்வனவு செய்யவும், அப்பொருட்களை பொதியிட்டு கொண்டு செல்லவும் நிபந்தனைகள் விதித்துள்ளமையினால் பாரிய அசௌகரிகங்களுக்கு தாம் முகம் கொடுப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .