2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நூரளை மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா; 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரிந்த கந்தப்பளை நோனா தோட்டத்தைச் சேர்ந்த இரு யுவதிகளுக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அந்த யுவதிகளின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, கந்தப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையிலேயே மேற்படி யுவதிகளுக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நோனா தோட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும் கோட்லோஜ் தோட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும், கந்தப்பளை தேயிலை மலைத் தோட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று  அவர் மேலும் தெரிவித்தார்.

தேயிலை மலை, நோனா தோட்டங்களைச் சேர்ந்த யுவதிகள் இருவர், கடந்த மாதம் 19 ஆம் திகதி தங்களது தோட்டங்களுக்கு வந்துள்ளதுடன் மேற்படித் தோட்டங்களிலுள்ள அவர்களது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளதுடன், 20 ஆம் திகதி மீண்டும் கொழும்புக்குத் திரும்பிச் சென்றுள்ளனர். 

இதன் காரணமாக இவ்விரு யுவதிகளின் வீட்டார்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேற்படி யுவதிகளின் உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

நுவரெலியா பிரதேச சபையின்  தவிசாளர் வேலு யோகராஜின் பணிப்பின் பேரில், மேற்படி யுவதிகளின் வீடுகளில், நேற்று (8) கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன்  குடும்பங்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கந்தப்பளையில் ஏனைய தோட்டப் பகுதி மக்களுக்கும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X