2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பகையால் மோட்டார் சைக்கிளை எரித்தவருக்கு விளக்கமறியல்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருணகுமார

நாவுல- ஹப்புகஸ்யாய வீடமைப்புத் திட்டப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை தீவைத்து எரித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர், இந்த மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நாவுல பிரதான நீதவான் ஆர்.டி. ஜானக முன்னிலையில் நேற்று (23) ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடமைப்புத் திட்டத்தைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 22ஆம் திகதி மாலை சுசுகி ரக மோட்டார் சைக்கிள் ஒன்று சந்தேகநபரால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கிடைத்த தகவலுக்கமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நபரொருவருடன் ஏற்பட்ட நீண்ட நாள் பகையே, குறித்த சம்பவத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X