Editorial / 2026 ஏப்ரல் 21 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்
பசறை, டெமேரியா 'பி' தோட்டத்தின் 'ஏ' பிரிவில் இன்று (21) பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற டிரெக்டர் விபத்தில் சாரதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த டிரெக்டர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் டிரெக்டரைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
காயமடைந்த சாரதி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .