2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

பசறையில் 20 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டன

R.Maheshwary   / 2022 மார்ச் 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

பசறை சுகாதார பிரிவினரால், பசறை நகரிலுள்ள 20 வர்த்தக நிலையங்களில்  திடீர் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்படிருந்த பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பொருட்களை கைப்பற்றினர்.

அத்துடன், குறித்த வர்த்தக நிலைய  உரிமையாளர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது, சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான, காலாவதியான உணவு பொருட்களை நீதிவான் நீதிமன்றில் முன்வைப்பதற்கான  நடவடிக்கைகளையும் பசறை சுகாதார பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X