2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று(13) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிக்கோயா புளியாவத்தை தோட்டப் பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு இறைச்சிக்காக கொண்டு சென்று கொண்டிருந்த போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாடுகளை கொண்டு சென்ற லொறியை பொலிஸார் டிக்கோயா பகுதியில் வைத்து இடைமறித்து விசாரணைகளை மேற்கொண்ட போதே, இவ்வாறு அனுமதிபத்திரமின்றி மாடுகளை கொண்டு செல்ல எத்தனித்த விடயம் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் பசு மாடுகள் இ​ரண்டுடன், லொறியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை  இன்றைய தினம் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .