2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

பதுளையில் 16 பேர் மரணம்: 10 பேர் மாயம்

Editorial   / 2025 நவம்பர் 27 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார இன்று (27) காலை நிலவரப்படி, பாதகமான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஆறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் பத்து பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஆபத்தான இடங்களிலிருந்து வெளியேறி தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X