2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

பதிவு செய்தவர்களுக்கு மாத்திரமே சமையல் எரிவாயு

R.Maheshwary   / 2022 மே 30 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன்-டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்காக நுகர்வோரை பதிவு செய்யம் நடவடிக்கை இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.

அம்பகமுவ பிரதேசசபையின் செயலாளர் ருவனி சிதாரா கமகே தலைமையில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் இந்த பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஹட்டன்-டிக்கோயா நகர சபை, ஹட்டன் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

தேசிய அடையாள அட்டை மற்றும் வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் உள்ளிட்டவைகள் இதன்போது கோரப்பட்டதுடன், குறித்த நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகைக்கு தங்கியிருப்பவர்களும் இந்த பதிவுகளில் உள்வாங்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X