2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பதுளை மாவட்டத்தில் மில்லியன் பெறுமதியில் உலர் உணவுப்பொதிகள்

Gavitha   / 2020 நவம்பர் 11 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 1,215 குடும்பங்களுக்கு, 10.2 மில்லியன் ரூபாய் பெருமதியான உலர் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமை தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் தொடர்பாக, கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பதுளை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை, வெலிமடை, லுணுகலை, பசறை, மகியங்கனை, ஹல்துமுள்ளை, ஹாலிஎலை, ஊவா – பரணகமை, மீகாகியுல, சொரணாதொட்டை ஆகிய பிரதேசங்களில், 1215 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள், அவ்வவ் பிரதேச செயலாளர்கள் ஊடாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்பமொன்றுக்கு, பத்தாயிரம் ரூபாய் பெறுதியான உலர் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டன என்றும்  அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X