Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.ஆ.ரமேஸ்
உடப்புஸ்ஸலாவை - சென்மாக்ரட் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பத்து வருடங்களாக அன்றாட தேவைக்கான குடி நீரைப் பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இத் தோட்டத்தில் 175 தொழிலாளர் குடும்பங்கள் வசிக்கின்ற போதிலும் இதில் 92 குடும்பங்களுக்கு முறையாக குடிநீர் வசதியில்லை என பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு குடிநீர வழங்க 1990 ஆம் ஆண்டு (MTIP) சமூக நிறுவனம் ஊடாக பிரதான குடிநீர் தாங்கி ஒன்று நிர்மாணிக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்பணிகள் 1991 ஆம் ஆண்டு முடிவு பெற்று, பொது பாவணைக்கு கையளிக்கப்பட்டது.
30 வருடங்களாக குறித்த தண்ணீர் தாங்கி ஊடாக தொழிலாளர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 வருடங்களாக இந்த தண்ணீர் தாங்கி தோட்ட நிர்வாகத்தால் முறையாக பராமரிக்கப்படாமல், குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, சென்மாக்ரட் புதிய கிராமத்தில் வசிக்கும் 83 குடும்பங்களுக்கு "பாம்" நிறுவனம் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள போதிலும் உரிய நடவடிக்கையை எடுக்க தோட்ட நிர்வாகம் முன்வருவதாக இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago