2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பன்விலவில் முதலாவது கொரோனா

Editorial   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

கண்டி மாவட்ட பன்விலை பிரதேசத்தில் முதலாவது கொவிட் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். பன்விலை அங்கம்மன பன்விலவத்த பிரதேசத்திலேயே முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.

55 வயதான, இவர் கொழும்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள சுப்பர் லங்கா எனும் தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்த நிலையில் இங்குள்ளவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் கடந்த மாதம் 30 ஆம் திகதி பஸ் வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.

இவரது பரிசோதனை அறிக்கையில் கொரோனாத் தொற்று இல்லை என்று தெளிவானதும் தனது சொந்த இடத்திற்கு இவர் வருகை தந்துள்ளார்.இவர் பன்விலை மருத்துவ அதிகாரி காரியாலயத்துக்கு தான் ஊருக்கு வருகை தந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

பன்விலை மருத்துவ அதிகாரியின் பணிப்புரையின்பேரில் சுய தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவருக்கு கடந்த 4 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இவரது பரிசோதனை அறிக்கை 5 ஆம் திகதி வெளிவந்ததையடுத்து. பரிசோதனை அறிக்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இவர் பொல்கொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு நேற்று (ஞாயிற்றுக் கிழமை) கொண்டு செல்லப்பட்டார்.

இவரது வீ;ட்டிலுள்ள நால்வரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் பி.சி.ஆர்  பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என பொது சுகாதார பரிசோதகர் அபேசிங்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X