2025 மே 15, வியாழக்கிழமை

பயணிகளுடன் வேகமாக ஓடிய 2 பஸ்கள் சிக்கின

Freelancer   / 2023 மார்ச் 05 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிக வேகத்தில் பயணித்த தனியார் பஸ்கள் இரண்டை , ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள்,தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தியதில் அவ்விரு பஸ்களுக்கும் வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் கிடைக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பலாங்கொடையில் இருந்து ஹட்டன் வரையிலும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பயணித்த தனியார் பஸ்கள் இரண்டே இவ்வாறு தமது பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விரு பஸ்களிலும் பயணித்த பயணிகளால், ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே, திடீர் சோ​தனைக்கு உட்படுத்திய போக்குவரத்துப் பொலிஸார், அவ்விரு பஸ்களையும் தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர்.

அவ்விரு பஸ்களைச் சேர்ந்த சாரதிகளும் டிக்கோயா பிரதேசத்தில் வைத்து பிரதான வீதியை மறித்து பஸ்களை நிறுத்திவிட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ்களின் நடத்துனர்கள் இருவரும் தகாத வார்த்தைகளை பேசியதுடன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .