2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

பேருந்தை இயக்ககோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்துகளை இயக்குமாறு கோரி நானுஓயா சமர்செட் கார்லிபேக் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது திங்கட்கிழமை (13)  அன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் கார்லிபேக் பகுதியில்  நடைப்பெற்றது.

இது தொடர்பாக தெரிய வருகையில்  ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஊடாக நுவரெலியா செல்லும் வீதியில்  கடந்த காலங்களில் இடம்பெற்ற பேருந்துகள் விபத்தின் காரணமாக இவ் வீதி ஊடாக பயணிக்கும் பேருந்து சேவை கடந்த மூன்று வருடங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக  இப்பிரதேச மக்கள் நுவரெலியா நகருக்கு செல்வதற்கு 5 Km தூரம் நடந்து சென்றே  நானுஓயா சந்தியில் பேருந்தில் ஏறுகின்றனர். மறுபுறம் தலவாக்கலை நகருக்கு செல்ல  2 Km தூரம் நடந்து சென்றே ரதல்ல சந்தியில் பேருந்தில் ஏறுகின்றனர் .

இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.பேருந்துகள் இவ்வீதி வழியே பயணிக்காமையால் இப்பிரதேச  பாடசாலை மாணவர்கள்,அரச ஊழியர்கள், தனியார் அலுவலக ஊழியர்கள்,ஏனைய  தொழில்துறைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் என  அனைவரும் குறித்த நேரத்துக்கு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

சுமார் 3500 மக்களை உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் இவ்வீதி வழியாக பேருந்து பயணிக்க தடை விதித்துள்ள மையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் இவ்வீதி வழியாக பயணிக்கும் சொகுசு பேருந்துகள் நிறுத்தப்படாமை,முச்சக்கர வண்டிகளுக்கு  அதிகம்  பணம் வசூலிக்கின்ற காரணங்களால் மக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகின்றதா கவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக அரசாங்கம் இவ்வீதியில் பேருந்து போக்குவரத்து சேவையை மீண்டும் வழங்குமாறு கோரி பிரதேச மக்கள் திங்கட்கிழமை (13) அன்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா கார்லிபேக் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  100 இற்கும் அதிகமான கார்லிபேக் தோட்ட மக்கள் கோஷங்களை எழுப்பியும் சுலோகங்களை ஏந்தியவாறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X