Janu / 2026 மே 20 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சீக் (Brownswall) தோட்டத்தின் ராணி பிரிவில், பலாக்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர், கால் வழுக்கிக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய முதியவர், பிற்பகல் 3.00 மணியளவில் தனது விவசாயத் தோட்டத்திலுள்ள பலா மரத்தில் பலாக்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். இதன்போது, எதிர்பாராதவிதமாக அவர் மரத்திலிருந்து தவறி, மரத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்."
இவ்விபத்தில் மரணமடைந்தவர் 68 வயதுடைய முத்துராமன் கிருஷ்ணசாமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது டிக்கோயா, கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
செ.தி.பெருமாள்
13 minute ago
29 minute ago
58 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
58 minute ago
4 hours ago