2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பலாங்கொடையில் மண்சரிவு: பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை

Gavitha   / 2020 நவம்பர் 10 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை பிரதேசத்தில், மண்சரிவு இடம்பெறும் பிரதேசங்களில் வாழும் மக்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் சுனில் பிரேமரத்ன அறிவித்துள்ளார்.

தற்போது இப்பகுதியில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ஏற்கெனவே இப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், அவ்வாறான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இப்பிரதேசத்தின், பெட்டிகல, யக்தெஹிதென்ன, ஹெரமிட்டிகல, எகொட, வலேபொட, கவரன்ஹேன, ராசகல போன்ற, மண்சரிவு ஏற்படலாம் என ஏற்கெனவே கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தால் அடையாளமிடப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X