Editorial / 2023 நவம்பர் 13 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்,சுஜிதா, கௌசல்யா,பி.கேதீஸ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலைக்கு பகுதிக்கு அருகில் (13.11.2023) மாலை இடம்பெற்றுள்ள கோஷ்டி மோதலில் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம் பிரதீபன் (வயது 28) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருடன் நீண்டநாள் பகை கொண்டிருந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரால் ஏற்பட்ட குழு மோதலில் இந்த கத்தி வெட்டு சம்பவம் நடந்தேறியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள ள்ள தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்
36 minute ago
55 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
55 minute ago
3 hours ago