Freelancer / 2022 டிசெம்பர் 10 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பஸ் நிலையத்தில் பஸ்ஸின் முன் சக்கரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார் என நுவரெலியா பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சம்பவத்தில் நுவரெலியா, சாந்திபுர அளுத் தொகுதியைச் சேர்ந்த பி.ஏ.ரோஹித என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் நுவரெலியா நகரில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் எனவும், தேவைக்காக நுவரெலியா பஸ் நிலையத்திற்கு சென்ற போது விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் பின்னர், விபத்து தொடர்பில் நியாயமான விசாரணை நடத்துமாறு நுவரெலியா வர்த்தகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, நுவரெலியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் லங்காம பேருந்தின் சாரதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சாரதியை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். R
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago