Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை ‘சசேக்ஸ்’ சர்வதேச பாடசாலையில், நேற்று (27) காலை திடீரென தீ பரவியதால், பாடசாலையின் உடமைகள் தீயில் எரிந்து சாம்பராகியுள்ளன எனத் தெரிவித்த பொலிஸார், இந்த அனர்த்தம் ஏற்பட்ட வேளையில், பாடசாலையில் ஒருவரும் இருக்கவில்லை என்றும், எனவே, உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
பொலிஸாரும் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பாடசாலையின் மாணவர்களும் ஆசிரியர்களும், வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக மைதானத்துக்குச் சென்றிருந்த வேளையிலேயே, இந்தத் தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற மாணவரின் பெற்றோர், பதற்றத்துடன் பாடசாலை வளாகத்தைச் சூழ்ந்துக்கொண்டனர் எனத் தெரிவித்த பொலிஸார், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் ஸ்தலத்துக்கு விரைந்தனர் எனவும் தெரிவித்தனர்.
சேத விவரங்களைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், பாடசாலை நிர்வாகத்துடனும் கலந்துரையாடினார்.
தீ பரவியதற்கான காரணம் இதுவரைக் கண்டறியவில்லை என்று தெரிவித்த பொலிஸார், தீ விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
22 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
46 minute ago