2025 மே 05, திங்கட்கிழமை

‘பாடசாலை சமூகத்துக்கு பாதுகாப்பு வேண்டும்’

Gavitha   / 2020 நவம்பர் 22 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள, பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில், சுகாதார நடைமுறைகளை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வலுப்படுத்த வேண்டும் என, தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இன்று (22) விடுத்துள்ள அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாலசேகரம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், நாளை (23) முதல், பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன என்றும் அந்த வகையில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும்  நுவரெலியா மாவட்டத்தில், ஹட்டன், பொகவந்தலாவ, தோட்டக்கலை, கினிகத்தேன, தலவாக்கலை, பத்தனை, சென்கிளயார், கிறேட்வெஸ்டன், அக்கரபத்தனை போன்ற பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கானோர், சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா ரைவஸ் அச்சம் தலைதூக்கியுள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு பின்னர், பலர் மேல் மாகாணத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்திலுள்ள சொந்த ஊர்களுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் இவ்வாறு வருகை தந்தவர்களில் பலர், தங்களை அடையாளம் காட்டாமல் மறைந்து திரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால், தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் சுகாதார வழிமுறைக்கு அமைவாக அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில், கொத்தணிகள் உருவாகாமல் இருப்பதற்கு, மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாடசாலைகள் அனைத்தும், உரிய சுகாதார நடவடிக்கைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X