2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை போக்குவரத்து சேவை சாரதிக்கு எச்சரிக்கை

R.Maheshwary   / 2022 மே 04 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் நகரிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் சாரதி ஒருவர், ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் இன்று  (4) கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் கோவில் வீதி, மின்சார சபை வீதி, மென்டிஸ் மாவத்த உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று, பாடசாலை வாகனத்தில் ஏற்றுவதுடன், அதிக மாணவர் தொகையுடன் ஆபத்தான வீதியில் பயணிக்கின்றமை தொடர்பிலேயே, குறித்த சாரதி எச்சரிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சாரதியின் இந்த நடவடிக்கை தொடர்பில், ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று அதிகாலை ஆபத்தான வீதியில் அதிக மாணவர் தொகையுடன் வாகனத்தை செலுத்திய போதே, போக்குவரத்து பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வாகனம்  செல்லும் போது இன்னொரு வாகனம் செல்ல முடியாத குறுகிய வீதியிலேயே இந்த போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும், தொடர்ந்து குறித்த சாரதி இந்த வீதியில் பயணித்தால் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X